வாவ்.. தோழிகளுடன் செம கியூட்டாக இருக்கும் நடிகர் விஜய்யின் மகள்! இந்த அழகிய புகைப்படத்தை பார்த்தீங்களா!!

வாவ்.. தோழிகளுடன் செம கியூட்டாக இருக்கும் நடிகர் விஜய்யின் மகள்! இந்த அழகிய புகைப்படத்தை பார்த்தீங்களா!!


Vijay daughter divya shasha photo viral

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக, டாப் ஹீரோக்களில் ஒருவராக கொடிகட்டி பறப்பவர் தளபதி விஜய். அவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில் அதற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

இதற்கிடையில் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்த எந்த தகவல்கள் வெளிவந்தாலும், அதனை ரசிகர்கள் பெருமளவில் வைரலாக்குவர். நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா. இவர்கள் இருவரும் 1999-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர்.

சஞ்சய் விஜய் நடிப்பில் வெளிவந்த வேட்டைக்காரன் படத்தில் ஓபனிங் சாங்கில் நடனமாடி இருப்பார். அவர் வெளிநாட்டில் திரைத்துறை சார்ந்த படிப்பை பயின்று வருகிறார். மேலும் திவ்யாவும் தெறி படத்தில் இறுதிக் காட்சியில் நடித்து இருப்பார். இவர் கனடாவில் தனது படிப்பை முடித்துள்ளார். திவ்யா சாஷா சமீபத்தில் தனது தோழிகளுடன் எடுத்துகொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

vijay