சினிமா

தாஜ்மஹால் முன்பு தாய் ஷோபாவுடன் விஜய்! வைரலாகும் யாரும் பார்த்திராத தளபதியின் சிறுவயது புகைப்படம்!

Summary:

சிறுவயதில் தாஜ்மஹாலின் முன் தாய் ஷோபாவுடன் தளபதி விஜய் இருக்கும் அரிய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட்  திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். அவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் அவரது படங்கள் வெளியாகும் நாட்கள் மற்றும் பிறந்த நாளை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடி வருவர். 

இறுதியாக  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் ஹீரோவாக நடித்திருந்த படம் மாஸ்டர். இப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் அனைத்தும் திறக்கப்படாத நிலையில் ரிலீசாகாமல் தள்ளி போயுள்ளது.  இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில் சிறுவயதில் நடிகர் விஜய் அவரது தாய்  ஷோபாவுடன் தாஜ்மஹாலுக்கு முன்பு நின்றவாறு  எடுத்துக்கொண்ட அரிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதனை தளபதி ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். 


Advertisement