சினிமா

இயக்குனர் சேரனின் மெகா ஹிட் படத்தில் நடிக்க மறுத்த தளபதி விஜய்! என்ன படம் தெரியுமா?

Summary:

Vijay cheran autograph movie

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உலகம் முழுவதும் உள்ளது. இவரின் பிறந்த நாள் மற்றும் படங்களை ரசிகர்கள் விழா போல கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது கோடை கொண்டாடமாக திரைக்கு வரவிருந்த மாஸ்டர் படம் கொரோனா பாதிப்பு காரணமாக திரைக்கு வரமுடியாமல் போனது. இந்நிகழ்வு விஜய் ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் விஜய் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது முதலில் காதல் படங்களில் மட்டும் நடித்து வந்த விஜய் ஒரு சில காலக்கட்டத்திற்கு பிறகு மாஸ் படங்களில் மட்டும் நடிக்க ஆரம்பித்தார். அந்த தருணத்தில் தான் விஜய்க்கு இயக்குனர் சேரன் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராப் என்ற மெகா ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.ஆனால் அந்த படத்தில் விஜய் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லையாம். 


Advertisement