நடிகர் விஜயை திட்டி தீர்த்த பிரபல நடிகரின் மனைவி! இதான் காரணமாம்!

நடிகர் விஜயை திட்டி தீர்த்த பிரபல நடிகரின் மனைவி! இதான் காரணமாம்!


Vijay antony wife scold sarkar team for occupying all screens

முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் தீபாவளி அன்று வெளியானது சர்க்கார் திரைப்படம். சுமார் 800+  ஸ்க்ரீனுக்கு மேல் சர்க்கார் திரைப்படம் திரையிடப்பட்டது. இதனால் மற்ற படங்களுக்கு தீபாவளிக்கு வெளியாகும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. அதில் நடிகர் விஜய் ஆண்டனியின் திமிரு புடுச்சவன் படமும் ஓன்று.

இதனால் இந்த படத்தின் ரிலீஸ் இந்த வாரம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த வாரம் காற்றின் மொழி, உத்தரவு மகாராஜா, செய், சித்திரம் பேசுதடி 2 , ஆகிய படங்கள் வெளியாக உள்ளதால்... திமிர் பிடித்தவன் படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என கூறிவருகின்றனர். இதனால் இந்த வாரமும் திட்டமிட்டபடி... ரிலீஸ் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

vijay antony

இதனால் கடுப்பான நடிகர் விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா இதெற்கெல்லாம் நடிகர் விஜய்தான் காரணம் என்பதுபோல் ட்விட் போட்டுள்ளார். விஜய்யின் 'சர்கார்' படமே தமிழ் நாட்டில் மட்டும் 800 திரையரங்குகளுக்கு மேல் ஆக்கிரமித்துவிட்டது. இதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் அனுமதி வாங்கிய பின்பும் எங்களால் குறித்த தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை என தன்னுடைய தரப்பில் உள்ள நியாயத்தை கூறி திட்டி தீர்த்துள்ளார்.