தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் திடீர் மறைவு.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
"என் மானம், மரியாதை எல்லாம் போச்சு" - விஜய் ஆண்டனியால் பங்கம் செய்யப்பட்ட பிரபல நடிகை..!!

கோலிவுட்டில் பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகராக இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் மழை பிடிக்காத மனிதன், கொலை, வள்ளி மயில் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் சில படங்களின் இறுதிகட்ட படப்பிடிப்புகளும் நடைபெற்று வருகிறது.
மேலும், இவர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் ரத்தம் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.இப்படம் இன்பினிடி பிலிம் வென்டர்ஸ் சார்பில் தயாரிக்கப்படுகிறது. இவருக்கு ஜோடியாக மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் நடிக்கின்றனர்.
இந்த நிலையில், இயக்குனர் தனது சமூகவலைதளபக்கத்தில் நடிகை மகிமா நம்பியார் தூங்கிக் கொண்டிருக்கும்போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, "கடின உழைப்பாளிகள் படக்குழுவினர் மட்டுமல்ல. நடிகர்களும் சமமான அர்ப்பணிப்புடன் உள்ளனர்.. அவரது வரிகளை தீவிரமாக கற்றுக் கொண்டபோது" என்று கலாய்த்து பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை பகிர்ந்த விஜய் ஆண்டனி, "அவங்க கடினமான உழைப்பை பார்க்கும்போது, அப்படியே என்னை பாக்குற மாதிரியே இருக்கு" என்று கிண்டலாக குறிப்பிட்டார். இதற்கு மகிமா நம்பியார், "அய்யய்யோ என் ஸ்டைல் போச்சு.. மானம் போச்சு.. மரியாதை போச்சு.. எல்லாம் போச்சு" என்று கேலியாக பதிவிட்டுள்ளார்.
அவங்க hardwork பன்றத பாக்கும் போது.
— vijayantony (@vijayantony) October 7, 2022
அப்புடியே என்ன பாக்குற மாறியே இருக்கு💪 https://t.co/NY2pVlPWoI