சினிமா

விஜய் ஆண்டனியா இது! ஆள் அடையாளமே தெரியலையே! புதிய கெட்டப்பால் மிரண்டுபோன ரசிகர்கள்!

Summary:

Vijay antony new getup photo viral

தமிழ்சினிமாவில் சுக்ரன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி.  அதனை தொடர்ந்து அவர் ஏராளமான திரைப்படங்களில் குத்தாட்டம் போடும்வகையில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். மேலும் இசையமைப்பாளராக பட்டி தொட்டியெல்லாம் கலக்கி வந்த விஜய் ஆண்டனி நான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கினார். அதனை தொடர்ந்து அவர் நான், சலீம்,  இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன் என தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். 

மேலும் திரில்லிங்காகவும், விறுவிறுப்பாகவும் இவரது படத்திற்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில்  எப்பொழுதும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் ஆண்டனி தற்போது அக்னி சிறகுகள் என்ற படத்தில் நடித்து வருகிறார். 

 இந்நிலையில் அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்துள்ளது. அதில் விஜய் ஆண்டனி வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன் புதிய கெட்டப்பில் உள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் பலரும் அதற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


Advertisement