விஜய் ஆண்டனி புதிய படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் ஒத்திவைப்பு .! வெளியான புதிய அறிவிப்பு.!vijay-antony-new-film-release-date-postponed-again

தமிழ் திரைப்பட உலகில் தயாரிப்பாளர், நடிகர், இசையமைப்பாளர், இயக்குனர் என பல முகங்களைக் கொண்டவர் விஜய் ஆண்டனி. சமீபத்தில் இவர் நடித்த பிச்சைக்காரன் 2 திரைப்படம் வெளியாகி காலவையான விமர்சனங்களை பெற்றது .

அதனைத் தொடர்ந்து வெளியான கொலை என்ற திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை பெறவில்லை என்றாலும் தற்போது இவரது நடிப்பில் ரிலீசுக்கு தயாராக இருக்கும் ரத்தம் திரைப்படம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. இந்த திரைப்படத்தை தமிழ் படம் 1&2 இயக்கிய சிஎஸ்.அமுதன் இயக்கியிருக்கிறார்.

Kollywoodஇந்தத் திரைப்படத்தில் விஜய் ஆண்டனி உடன் ரம்யா நம்பீசன், நிவேதிதா மற்றும்  மகிமா நம்பியார் ஆகியோர் நடித்திருக்கின்றனர். 2022 ஆம் ஆண்டிலிருந்து இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. தற்போது இதன் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முடிந்து செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாவதாக இருந்தது.

இந்தத் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி  வித்தியாசமான ப்ரோமோஷன்  ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்த நிலையில் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றப்பட்டதாக பட குழு அறிவித்து இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ரத்தம் திரைப்படம் அக்டோபர் மாதம் 6-ம் தேதி வெளியாக போவதாக படக்குழுவினர் அறிவித்து இருக்கின்றனர். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில்  படத்தின் போஸ்டருடன் வெளியிட்டு இருக்கிறார் விஜய் ஆண்டனி.