காதல் மன்னனாக களமிறங்கும் விஜய் ஆண்டனி.. புதுப்பட அறிவிப்பு.!Vijay Anthony in Romeo poster

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதன் பின்னர் பாடகர், தயாரிப்பாளர், நடிகர் என பல அவதாரங்களை எடுத்து ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளார். இதில் இவர் இசையமைக்கும் பாடல்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர்.

vijay antony

இவர் குறைவான திரைப்படங்களை நடித்திருந்தாலும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான பிச்சைக்காரன் 2 மற்றும் கொலை ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

vijay antony

இந்த நிலையில் தற்போது இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் ரோமியோ என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளார். காதல் திரைப்படமாக உருவாகும் இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக, மிர்னாளினி ரவி நடிக்கிறார்.

இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என படுக்குழு போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது.