சினிமா

என்ன ஒரு அழகான ஜோடி! வைரலாகும் கோலாகலமான விஷால்- அனிஷா நிச்சயதார்த்த புகைப்படங்கள்.!

Summary:

vijay anisha encagement photos

தமிழ் சினிமாவில் செல்லமே படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஷால். இவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராகவும், தென் இந்திய நடிகர்கள் சங்கப் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.

இவர் நடிகை வரலட்சுமியை காதலிப்பதாக வதந்திகள் பரவி வந்தது. இந்த நிலையில் அதற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் விஷால், ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் தினேஷ் ரெட்டி-சவீதா தம்பதியின் மகள் அனிஷாவை காதலித்து, திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டார்.

மேலும் அவர்களுக்கு மார்ச் 16 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது எனவும் தகவல்கள் வெளியானது. இதனை தொடர்ந்து மார்ச் 16 இன்று விஷால் மற்றும் அனிஷாவிற்கு படுகோலகாலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

அதன் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  


Advertisement