கமல்60 நிகழ்ச்சிக்கு தல, தளபதி வராததற்கு இதுதான் காரணமாம்! உண்மையை கூறிய பிரபல காமெடி நடிகர்!

கமல்60 நிகழ்ச்சிக்கு தல, தளபதி வராததற்கு இதுதான் காரணமாம்! உண்மையை கூறிய பிரபல காமெடி நடிகர்!


Vijay  ajith manobala

தமிழ்சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்கள் ரஜினி மற்றும் கமல்ஹாசன் அவர்கள். இவர்களுக்கு இன்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. கமல் ரஜினியை தொடர்ந்து அடுத்து ரசிகர்களால் கொண்டாட படுபவர்கள் அஜித் மற்றும் விஜய்.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற கமல் 60 கொண்டாட்டத்தில் பெரும்பாலான பிரபலங்கள் கொண்டனர். அதில் ஸ்டார் ரஜினியும் கலந்துகொண்டு கமலைப் புகழ்ந்து சிறப்புரையாற்றினார். ஆனால் நிகழ்ச்சியில் தல மற்றும் தளபதி அவர்கள் கலந்து கொள்ளவில்லை.

Ajith

இதனால் ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் இருந்து வருகின்றனர். ஆனால் அவர்கள் இருவரும் வருவதற்கு இதுதான் உண்மையான காரணம் என பிரபல காமெடி நடிகர் மனோபாலா கூறியுள்ளார்.

அதாவது தளபதி விஜய் அவர்கள் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பிற்காக டெல்லி சென்றுள்ளதால் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் அஜித் அவர்கள் வராததற்கு காரணம் அவரது தந்தை மிகுந்த உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரைக் கவனித்துக் கொள்வதால் தான் வர முடியவில்லை எனவும் கூறியுள்ளார்.