என்னது..? அப்படியா..? சிம்புவுக்காக எழுதிய அந்த கதையில்தான் விஜய் அடுத்து நடிக்கிறாரா? தீயாக பரவும் தகவல்..

என்னது..? அப்படியா..? சிம்புவுக்காக எழுதிய அந்த கதையில்தான் விஜய் அடுத்து நடிக்கிறாரா? தீயாக பரவும் தகவல்..


vijay-act-in-vettai-mannan-movie-which-was-written-for

நடிகர் சிம்புவுக்காக எழுதப்பட்ட கதையில்தான் நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குனர் வினோத் இயக்கத்தில் தனது 65 வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ தகவல்கள் சமீபத்தில் வெளியானது.

இந்த படம் முழுக்க முழுக்க காமெடி படமாக இருக்கும் என கூறப்பட்டாலும், இல்லை இல்லை, இது சிம்புவின் வேட்டை மன்னன் கதை என ஒருபுறம் செய்திகள் வெளியாகிவருகிறது. கோலமாவு கோகிலா படம் மூலம் இயக்குனராக அறிமுகமான நெல்சன் அதற்கு முன்னதாக கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகர் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்ற படத்தை இயக்கிவந்தார்.

Thalapathi 65

படத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அந்த டீசரில் சிம்பு துப்பாக்கியுடன் இருக்கும் காட்சிகள் அதிகமாக இடம் பெற்றிருந்தது. ஆனால் ஒருசில காரணங்களால் அந்த படம் பாதியிலையே கைவிடப்பட்டது. தற்போது விஜய் - நெல்சன் இணையும் படத்திலும் அதிகம் துப்பாக்கி வரும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதால், வேட்டை மன்னன் படத்தில் ஒருசில காட்சிகளை மாற்றி அந்த படத்தில்தான் விஜய் தற்போது நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.