சினிமா

பொறுப்பில்லாமல் இளையதளபதி விஜய் இப்படியா நடந்து கொள்வது - திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்!

Summary:

vijay

சர்க்கார் படத்தை அடுத்து இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்துவருகிறார் தளபதி விஜய். தெறி, மெர்சல் என இரண்டு மெகாஹிட் படங்களை கொடுத்த இந்த கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக பிகில் படத்தில் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி செம ஹிட் அடித்தது. இந்நிலையில் படம் வரும் தீபாவளிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விஜய் நடிப்பில் ஏற்கனவே வெளியான சர்க்கார் படத்தில் நடிகர் விஜய் அவர்கள் இலவசமாக வழங்கிய பொருட்களை தூக்கி எறியும் காட்சி ஒன்று அமைத்துள்ளது. இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் அதே போல் இலவச லேப்டாப், டிவியை தூக்கி எறிந்தனர்.

அப்படியிருக்க தற்போது பிகில் படத்தின் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது, இதில் விஜய் நடுரோட்டில் பைக்கில் பறந்து வருகின்றார்.அதில் விஜய் ஹெல்மெட் இல்லாமல் அதிவேகமாக பைக்கில் செல்கின்றார்.

இதை பார்த்த பலரும் ஹெல்மெட் கூட அணியாமல் ஒரு முன்னணி நடிகர் இப்படி செல்வது இளைஞர்களுக்கு ஒரு தவறான வழிக்காட்டுதல் என கூறிவருகின்றனர்.  


Advertisement