சினிமா

விஜய் 64 படத்தின் டைட்டில் இதுதானா! வெளியான மாஸ் தகவல்!

Summary:

Vijay 64 title nama

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் விஜயின் 63 வது படமாக தீபாவளிக்கு திரைக்கு வந்த படம் தான் பிகில். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.

இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 64 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி தற்போது டெல்லியில் சூட்டிங் நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளராக அனிருத் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிகில் படத்தில் வெளிதனம் போல் விஜய் 64 படத்தில் ஆரம்ப பாடலாக சம்பவம் என தொடங்கும் பாடலை அனிருத் பாடியுள்ளார்.

அதனை வைத்து படத்தின் டைட்டில் சம்பவம் என இருக்கும் என பலர் கூறி வருகின்றனர். ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. 


Advertisement