விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தல தோனி.. வெளியான அசத்தல் அப்டேட்.!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தல தோனி.. வெளியான அசத்தல் அப்டேட்.!


Vignesh shivan direct MS dhoni for ad

தமிழ் சினிமாவில் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் என்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக உருவானார்.

MS Dhoni

இதனிடையே லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாராவை காதலித்து காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தது குறிப்பிடத்தக்கது.

இவருடைய இயக்கத்தில் கடைசியாக வெளியான காத்து வாக்குல இரண்டு காதல் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், நடிகர் அஜித் குமாரின் 62வது படத்தை இயக்கும் வாய்ப்பையும் இழந்தார்.

MS Dhoni

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனியின் விளம்பர படத்தை இயக்கவுள்ளார். இந்த விளம்பரத்தில் தல தோனி உடன் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கவுள்ளார். இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் தான் கடவுளாக கருதும் ஒருவரை இயக்க வாய்ப்பு கிடைத்தது தன் வாழ்நாளில் மறக்க முடியாது என தெரிவித்துள்ளார்.