விக்னேஷ் சிவனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறாத நயன்தாரா.. என்ன காரணம் தெரியுமா.?

விக்னேஷ் சிவனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறாத நயன்தாரா.. என்ன காரணம் தெரியுமா.?


Vignesh Shivan birthday

தமிழ் சினிமாவில் "போடா போடி" என்ற திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால், இடையில் பாடல்களும் எழுத ஆரம்பித்தார் விக்னேஷ் சிவன்.

Vignesh

மேலும் அஜித்தின் "என்னை அறிந்தால்" படத்தில் வரும் அதாரு அதாரு பாடல், மாரி படத்தில் தப்பா தான் தெரியும் ஆகிய பாடல்கள் விக்னேஷ் சிவன் எழுதியது தான். அதன் பின்னர் 2015ம் ஆண்டு விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து "நானும் ரவுடி தான்" திரைப்படத்தை இயக்கினார்.

அந்தப்படத்தின் போது தான் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. தொடர்ந்து 2022ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதன் பின்னர், நயன்தாராவுடன் இணைந்து "ரவுடி பிக்சர்ஸ்" என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார்.

Vignesh

தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் காத்துவாக்குல ரெண்டு காதல், நெற்றிக்கண், ராக்கி உள்ளிட்ட படங்களை விக்னேஷ் சிவன் தயாரித்தார். மேலும் 2020ம் ஆண்டு# நெட்பிளிக்ஸில் வெளியான பாவக்கதைகள் தொடரில் ஒரு பகுதியை இயக்கினார். இன்று இவரது பிறந்த நாளை முன்னிட்டுப் பலரும் வாழ்த்தி வருகின்றனர். ஆனால் நயன்தாரா, விக்னேஷ் சிவனிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூற மறந்து விட்டாரா என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்