நயன்தாராவுடன் திருமணம்! எப்போ? எங்கே?? முதன்முறையாக விக்னேஷ் சிவன் வெளியிட்ட அறிவிப்பு!!



vignesh-shivan-announcement-about-marriage-with-nayanth

தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவனை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வருகிறார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

மேலும் இருவருக்கும் திருமணம் எப்போதுதான் என பெரும் ஆவலுடன் ரசிகர்கள் தொடர்ந்து கேள்வியெழுப்பி வந்தனர். இந்த நிலையில் சமீபகாலமாக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவருக்கும் ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் பரவி வந்தது. ஆனால் இதுகுறித்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் எந்த தகவலும் வெளியிடவில்லை.

nayanthara

இந்த நிலையில் தற்போது முதன்முறையாக விக்னேஷ் சிவன் தங்களது திருமணத்தை உறுதி செய்துள்ளார். இவர் செய்தியாளர்கள் சந்திப்பில், எங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்கிறோம். ஜூன் 9ம் தேதி நான் நயன்தாராவை திருமணம் செய்து கொள்கிறேன். மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெறுகிறது. திருப்பதி கோவிலில் திருமணம் நடைபெற திட்டமிட்டிருந்தோம்.

ஆனால் சில காரணங்களால் நடத்த முடியவில்லை.திருமணம் முடிந்த பிறகு புகைப்படங்களை வெளியிடுவோம். ஜூன் 11ம் தேதி நானும், நயன்தாராவும் சேர்ந்து மீடியாவை சந்திக்கிறோம். இத்தனை நாட்கள் நீங்கள் ஆதரவு அளித்தது போன்று இனி தனிப்பட்ட வாழ்க்கையிலும் உங்களின் ஆதரவும், வாழ்த்தும் தேவை என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.