அதெல்லாம் உண்மையில்லை.. குக் வித் கோமாளி சூட்டிங் ஸ்பாட்டில் இதான் நடக்கும்! உண்மையை உடைத்த வித்யுலேகா!!

அதெல்லாம் உண்மையில்லை.. குக் வித் கோமாளி சூட்டிங் ஸ்பாட்டில் இதான் நடக்கும்! உண்மையை உடைத்த வித்யுலேகா!!


Vidyulekha answer about cook with comali controversy

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி சமையல் திறமையை ஊக்குவிக்கும் வகையிலும், அதையே ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்கவைக்கும் வகையிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 ஆரம்பமாகியுள்ளது.

மனோபாலா, ரோஷினி ஹரிபிரியன், ராகுல் தாத்தா, வித்யூலேகா, தர்ஷன், கிரேஸ் கருணாஸ், ஷ்ருதிகா, ஆண்டனி தாசன், சந்தோஷ் பிரதாப்  ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். வித்யுலேகா சமையலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். முதல் வாரத்திலேயே இத்தாலிய உணவுகளை சமைத்து நடுவர்களிடம் பாராட்டுக்களை வாங்கினார்.

Vidyulekha

இதற்கிடையில் நிகழ்ச்சியில் கோமாளிகள் கலகலப்பாக அடிப்பது குறித்து சர்ச்சைகள் எழுந்தது. இந்த நிலையில் வித்யுலேகா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் இதை ஒரு காமெடி நிகழ்ச்சியாக மட்டும் பாருங்கள். நீங்கள் சிரிக்க வேண்டும் என்பதற்காகவே அனைத்தையும் செய்கிறோம்.

இதில் யாரையும் நிஜமாக அடிப்பது கிடையாது எல்லாம் சவுண்ட் எபெக்ட் தான்  என தெரிவித்துள்ளார். மேலும் குக் வித் கோமாளி படப்பிடிப்பில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். 100% இதில் நான் நானாகதான் இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.