தயாரா இருங்க.. விடுதலை படம் குறித்து வெளிவந்த சூப்பரான அப்டேட்.! படக்குழு வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

தயாரா இருங்க.. விடுதலை படம் குறித்து வெளிவந்த சூப்பரான அப்டேட்.! படக்குழு வெளியிட்ட புதிய அறிவிப்பு!!



Viduthalai trailer audio launch release date announced

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விடுதலை. இந்தப் படம் இரு வெவ்வேறு பாகங்களாக உருவாகவுள்ளது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. 

விடுதலை படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். மேலும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து படம் வெளியாவதற்கான ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் விடுதலை படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீடு குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி விடுதலை படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வரும் மார்ச் 8 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் உற்சாகத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.