வெற்றிமாறன் - சூரி கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பில் விபத்து; ஒருவர் பரிதாப பலி.!

வெற்றிமாறன் - சூரி கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பில் விபத்து; ஒருவர் பரிதாப பலி.!


Viduthalai Movie Shooting Spot Accident Stunt Trainer Died

வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி முத்துசாமி, விஜய் சேதுபதி, கெளதம் வாசுதேவ் மேனன்  நடிப்பில் அட்டகாசமாக உருவாகிவரும் திரைப்படம் விடுதலை. படம் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்தால் வெளியிடப்படவுள்ளது. இப்படத்தின் போட்டோ சூட் முன்னதாகவே நடைபெற்று முடிந்திருந்தது.

அதனைத்தொடர்ந்து, படப்பிடிப்பு விரைவில் நடைபெறும் என அறிவிப்புகள் வெளியாகின. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று வண்டலூர், கேளம்பாக்கம் பகுதியில் நடைபெற்று வந்தது. 

Viduthalai

அப்போது, படத்தில் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த தருணத்தில் ரோப் கயிறு அறுந்து விழுந்து, சண்டை பயிற்சியாளர் சுரேஷ் என்பவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். 

அவரை மீட்ட சக தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யவே, அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் மறைவு திரைப்பட சண்டை பயிற்சியாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.