காமெடி நடிகர் சூரியா இது.. சூரி செய்த செயலை பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள்.?Viduthalai hero soori latest video

தமிழ் சினிமாவில் காமெடி நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் நடிகர் சூரி. ஆரம்பத்தில் சில கதாபாத்திரங்களில் நடித்த சூரி பரோட்டா சூரியாக மக்கள் மத்தியில் பிரபலமானார்.

Soori

'வெண்ணிலா கபடி குழு' எனும் திரைப்படத்தில் ஒரு காமெடி காட்சியில் 50 புரோட்டா உண்பது போல் படம் பிடிக்கப்பட்டது. அதிலிருந்து பரோட்டா சூரியின் காமெடி மக்கள் மத்தியில் பிரபலமானது.

இப்படத்திற்குப் பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கி காமெடி நட்சத்திரமாக வெள்ளித்திரையில் ஜொலித்துக் கொண்டிருந்தார் நடிகர் சூரி. சமீபத்தில் 'விடுதலை' திரைப்படம் வெளியானது. இப்படத்தில் கதாநாயகனாக களமிறங்கினார்.

Soori

சூரியின் நடிப்பு படத்தில் வெகுவாக பாராட்டப்பட்டு வந்தது. இதன்படி தற்போது சமூக வலைத்தளங்களில் சூரி சாகச பயணம் மேற்கொண்டது போல் புகைப்படம் பரவி வருகிறது. அப்புகைப்படத்தில் "உங்களின் தன்னம்பிக்கை, உழைப்பு துணிச்சலை பொறுத்தே உங்களின் மகிழ்ச்சி இருக்கும்" என்பதை குறிப்பிட்டிருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.