சினிமா

லாக்டவுனில் சத்தமே இல்லாமல் நடந்த நடிகை வித்யுலேகாவின் நிச்சயதார்த்தம்! மாப்பிளை இவர்தானா? வைரலாகும் புகைப்படம்!

Summary:

Vidhyulekha engagement done photos viral

தமிழில் கௌதம் மேனன் இயக்கிய நீதானே என் பொன்வசந்தம் திரைப்படத்தில் நடிகை சமந்தாவுக்கு தோழி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை வித்யூலேகா. இதில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அவர் தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு, ஜில்லா, வீரம், வேதாளம் உள்ளிட்ட பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவர் முன்னணி காமெடி நடிகையாகவும் வலம் வந்தார். மேலும் இவர் தெலுங்கிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் மோகன் ராமின் மகள் ஆவார்.

 இந்நிலையில் கொரோனா லாக்டவுனில்  எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி சத்தமே இல்லாமல் அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது,

எங்களது ரோகா விழா கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி நடந்து முடிந்தது. அதில் நெருக்கமான குடும்ப உறவினர்கள் மட்டும்  கலந்து கொண்டனர். நாங்கள் மாஸ்க் அணிந்துதான் இதில் பங்கேற்றோம். போட்டோ எடுப்பதற்காகதான் அதை நீக்கியுள்ளோம். எங்களுக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் மிக்க நன்றி என தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து திரைப்பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Advertisement