அஜித்துக்கு ஜோடியாக நடித்தவரா இது? அசத்தலான புதிய லுக்குடன் வெளியான அட்டகாசமான புகைப்படம் இதோ!!vidhyabalan-next-movie-firstlook-poster-leaked

தமிழ் சினிமாவில் போனிகபூர் தயாரிப்பில், அஜித் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடைய 
மாபெரும் வெற்றியை பெற்ற படம் நேர்கொண்ட பார்வை. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்வகையில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்திருந்தார். மேலும் அதில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தவர் பாலிவுட் நடிகை வித்யா பாலன். அவர் முதன்முதலாக இத்திரைப்படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமானார்.

பாலிவுட் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்த இவர் அறிவியல், விண்வெளி, செவ்வாய் கிரகம் ஆகியவற்றை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட மிஷன் மங்கள் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அக்‌ஷய் குமார் நடித்துள்ள இப்படம் ரசிகர்களையே மாபெரும் வரவேற்பை பெற்றது.

vidhyabalan

அதனை தொடர்ந்து அனுமேனன் இயக்கத்தில் வித்யா பாலன் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். பெண் கணித மேதையான சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாற்று படமான இப்படத்திற்கு சகுந்தலா தேவி தி ஹியூமன் கம்ப்யூட்டர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டுள்ளது. இதில் அவரது புதிய லுக் புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.