கெத்து வில்லனாக களமிறங்கும் வெங்கட் பிரபு! யார் ஹீரோ, ஹீரோயின் தெரியுமா?

வெங்கட் பிரபு ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர், திரைப்பட இயக்குநர், பின்னணிப் பாடகர், திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் ஆவார்.
ஜருகண்டி படத்திற்குப் பிறகு தற்போது நடிகரும் வெங்கட் பிரபுவின் நண்பருமான நிதின்சத்யா தயாரிக்கும் படத்தில் வில்லனாக நடிக்கிறார் வெங்கட் பிரபு. வைபவை தெறிக்கவிடும் வில்லனாக இயக்குனர் வெங்கட்பிரபு நடிக்கிறார். இவர் வில்லனாக நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் வைபவ் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார், சீரியல் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம்பிடித்த நடிகை வாணி போஜன் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
முழுக்க முழுக்க காவல்துறை சம்பந்தப்பட்ட சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் இப்படத்தை பிரபல இயக்குனர் மோகன் ராஜாவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய சார்லஸ் இயக்குகிறார். இந்த படப்பிடிப்பு முக்கால்வாசி முடிவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இந்த படத்தினை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.