கொஞ்சம் பொறுமையா இருங்க.. கோட் படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!

கொஞ்சம் பொறுமையா இருங்க.. கோட் படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!



Venkat Prabhu speech about GOAT movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். தற்போதைய இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

venkat prabhu

மேலும், இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், மீனாட்சி சவுத்ரி, சினேகா, வைபவ், அரவிந்த், பிரேம்ஜி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படிப்பிடிப்பு சென்னை மற்றும் தாய்லாந்தில் நடைபெற்று வந்தது.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்தப் படத்திற்கு GOAT என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் விஜயின் கோட் திரைப்படம் குறித்து ரசிகர்கள் அப்டேட் கேட்டுள்ளனர். அதற்கு பதில் அளித்த அவர், கோட் அப்டேட் கொடுக்கலாம். ஆனால் ரொம்ப சீக்கிரமா கொடுக்கிற மாதிரி இருக்கும்.

venkat prabhu

கரெக்டான டைம்ல கொடுக்கணும்னு வெயிட் பண்றோம். கொஞ்சம் பொறுமையா இருங்க. பெரிய போஸ்ட் ப்ரடக்ஷன்ஸ் உள்ள திரைப்படம் இது. இப்போ கூட ஷூட்டிங் போயிட்டு இருக்கு. கோட் திரைப்படம் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என அவர் கூறியுள்ளார்.