வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யாவின் என்சி22.! வெளிவந்த சூப்பரான அப்டேட்.! என்ன தெரியுமா??

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யாவின் என்சி22.! வெளிவந்த சூப்பரான அப்டேட்.! என்ன தெரியுமா??


Venkat prabhu movie update released

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கி பிரபல இயக்குனராக வலம் வரும் வெங்கட் பிரபு  தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் நடிகர் நாக சைதன்யாவை ஹீரோவாக வைத்து புதிய படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக என்சி 22 என பெயரிடப்பட்டுள்ளது.இதில் ஹீரோயினாக, நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

 மேலும் வில்லனாக அரவிந்த்சாமி நடிப்பதாக கூறப்படுகிறது.  இந்த படத்தில் சரத்குமார், பிரேம்ஜி, வென்னேலா கிஷோர், சம்பத்ராஜ், பிரியாமணி உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர்களான இளையராஜா, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றனர். 

என் சி 22 படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் படத்தின் புதிய சூப்பரான அப்டேட் குறித்து படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது என்சி 22 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் நாளை காலை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.