வெந்து தணிந்தது காடு.. நியூ இயர் பரிசாக வெளிவந்த அசத்தலான அப்டேட்! கொண்டாடும் சிம்பு ரசிகர்கள்!!

வெந்து தணிந்தது காடு.. நியூ இயர் பரிசாக வெளிவந்த அசத்தலான அப்டேட்! கொண்டாடும் சிம்பு ரசிகர்கள்!!


vendhu-thaninthadu-kaadu-movie-update-released

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் சிம்பு. இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சிம்பு இறுதியாக வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கெளதம் மேனன் இயக்குகிறார். மேலும் இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார்.

இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இந்நிலையில் புத்தாண்டு பரிசாக  வெந்து தணிந்தது காடு படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஜனவரி 3ஆம் தேதி முதல் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் தொடங்க உள்ளதாகவும், முத்துவின் பாவையான சித்திட்ஞானி நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தில் சிம்புவின் பெயர் முத்து எனவும், ஹீரோயினின் பெயர் பாவை எனவும் இருக்கலாம் என கூறப்படுகிறது.