சினிமா

தல அஜித் அவர்களுடன் நடிக்க ஆசை, பிரபல இளம் நடிகை ஓபன் டாக்!

Summary:

Venba ajith

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தல அஜித். இவருக்கென தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரின் எளிமையான குணத்திற்கும் மற்றும் அனைவரையும் பண்பாக நடத்தும் குணத்தால் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளம் உருவானது.

சமீபத்தில் தற்போது இவர் நடிப்பில் வெளியான நேர் கொண்ட பார்வை படம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சினிமாவில் இவருடன் நடிப்பது என்பது பல நடிகர், நடிகைகளின் கனவாக இருந்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான மாயநதி படத்தின் ஹுரோயின் வெண்பா ஒரு பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். அதாவது தமிழ் சினிமாவில் தல அஜித் அவர்களுடன் ஒரு தடவையாவது நடித்து விட வேண்டும். அது தான் எனது ஆசை என கூறியுள்ளார். 


Advertisement