மாவீரன் படத்தை பார்த்து கலங்கிப்போன திருமாவளவன்; சென்னை பூர்வகுடிகள் கண்ணீரை நேரில் கண்ட உணர்வு.!

மாவீரன் படத்தை பார்த்து கலங்கிப்போன திருமாவளவன்; சென்னை பூர்வகுடிகள் கண்ணீரை நேரில் கண்ட உணர்வு.!


VCK Thirumavalavan About Maveeran Movie 

 

நடிகர்கள் சிவகார்த்திகேயன், மிஸ்கின், அதிதி சங்கர், மோனிஷா, சரிதா, கௌண்டமணி சுனில், யோகிபாபு உட்பட பலர் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் மாவீரன். 

மண்டேலா படத்தை இயக்கி வழங்கிய இயக்குனர் மடோன்னே அஸ்வின் மாவீரன் திரைப்படத்தை இயக்கி வழங்கியுள்ளார். படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

Vck

இந்நிலையில், படத்தை பார்த்து நெகிழ்ச்சியுடன் பேட்டியளித்த விசிக தலைவர் திருமாவளவன், "படத்தில் உள்ள பல காட்சிகள் என்னை கண்கலங்க செய்தது. சென்னையில் உள்ள பூர்வகுடிகள் புறநகர் பகுதிகளுக்கு மாற்றப்படுகின்றனர். 

அவர்களுக்கு வீடு கட்டி கொடுப்பதாக கூறினாலும், அவற்றின் தரம் என்பது கேள்விக்குறியாகிறது. பூர்வகுடி மக்களின் கண்களில் வரும் நீரை நான் நேரில் இருந்து பார்த்தவன். பல காட்சிகள் என்னை களத்திற்கே அழைத்து சென்றது" என பேசினார்.