அடேங்கப்பா.. பிக்பாஸ் தாமரைக்கு சக போட்டியாளர் கொடுத்த அசத்தலான கிப்ட்! என்னனு பார்த்தீங்களா!!

அடேங்கப்பா.. பிக்பாஸ் தாமரைக்கு சக போட்டியாளர் கொடுத்த அசத்தலான கிப்ட்! என்னனு பார்த்தீங்களா!!


Varun give gift to bigboss thamarai

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 5வது சீசன் அண்மையில் முடிவுக்கு வந்தது. இந்த சீசனில் 18 போட்டியாளர்களில் ஒருவராக  கலந்து கொண்டு, 95 நாட்கள் மிகவும் சிறப்பாக விளையாடி மக்கள் மத்தியில் பிரபலமானவர் நாடகத் துறையை சேர்ந்த தாமரைச்செல்வி.

ஆரம்பத்தில் விளையாட்டு புரியாமல் குழம்பிபோய் இருந்த தாமரை பின்னர் உஷாராகி அனைத்தையும் புரிந்து கொண்டு தன்னிச்சையாக மிகவும் சாமார்த்தியமாக விளையாட துவங்கினார். தாமரை தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

thamarai

இவர் பிக்பாஸ் வீட்டில் ஒரு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதற்கு கேஸ் ஸ்டவ் பரிசாக கொடுக்கப்பட்டது. அப்பொழுது அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அதனைக் கண்ட சக போட்டியாளர்கள் ஆச்சரியம் அடைந்தனர். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு அவருக்கு சக போட்டியாளரான வருண் பிரிட்ஜ், மைக்ரோ ஓவன் போன்றவற்றை பரிசாக கொடுத்துள்ளாராம். இதுகுறித்து தாமரை பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.