சினிமா

நடிகர் விஜய் இந்த மாதிரி வீடியோக்களைதான் ரொம்ப ரசித்து பார்ப்பாராம்! பிகில் பிரபலம் வெளியிட்ட தகவல்!

Summary:

varsha pollamma talk about vijay in interview

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றித் திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பர் நடிகர் விஜய். இவருக்கென உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவரது படங்கள் வெளியாகும் நாட்கள் மற்றும் பிறந்த நாளை ரசிகர்கள் திருவிழாக்களை போல கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் பிகில் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து டப்பிங் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய் குறித்து யாருக்கும் தெரியாத தகவல் ஒன்றை பிகில் படத்தில் நடித்த வர்ஷா பொல்லம்மா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் மிகவும் அமைதியாகவும்,  அனைவரிடமும் அன்பாகவும் நடந்து கொள்ளும் நடிகர் விஜய்க்கு யூடியூப் சேனலில் விலங்குகள் செய்யும் சேட்டைகள் தொடர்பான வீடியோக்களை பார்ப்பது மிகவும் பிடிக்குமாம். 

நாய் போன்ற விலங்குகள் செய்யும் சாகசங்கள், பூனையின் அட்டகாசம் மற்றும் பிற விலங்குகளின் சேட்டைகளை குறித்த வீடியோக்களை யூடியூப் சேனலில் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து ரசிப்பாராம் விஜய் . இவ்வாறு ஒரு தடவை வர்ஷா இதை போன்ற வீடியோ ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தபோது நடிகர் விஜய் பின்னால் நின்று அதனை பார்த்து ரசித்து சிரித்தார் என வர்ஷா  கூறியுள்ளார்.
 


Advertisement