ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
வாரிசா? துணிவா?.. இதுதான் அசல் வெற்றி.. உண்மையை போட்டுடைத்த தல ரசிகர்கள்..!
தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், குஷ்பூ, யோகி பாபு, வெங்கட்ராம், சரத்குமார் உட்பட பலர் நடிப்பில் ஜனவரி 11-ஆம் தேதி வெளியாகியுள்ள திரைப்படம் வாரிசு. இப்படத்தின் ட்ரெய்லர் காட்சிகள் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.
போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் உட்பட பல திரையுலக நட்சத்திரங்கள் நடித்துள்ள திரைப்படம் துணிவு. இப்படத்தின் ட்ரெய்லர் காட்சிகள் கடந்த வாரத்தில் வெளியாகி ஏகபோக வரவேற்பு பெற்று இருந்தது. உச்ச நட்சத்திரமாக இருந்துவரும் அஜித், விஜய் ஆகியோரின் ரசிகர்கள் யார் அதிக பார்வையாளர்களை கடந்து டிரைலர் வெளியீட்டில் சாதனை செய்தார்கள் என ட்விட்டரில் சண்டை நடத்தி வந்த நிலையில், தற்போது முதலில் வாரிசு ட்ரெய்லர் வெளியான ஒரு மணிநேரத்தில் துணிவை தோற்கடித்ததாக கூறப்பட்டது.
அதனை தொடர்ந்து 24 மணிநேரத்தில் துணிவு மீண்டும் வெற்றி பெற்றது என கூறப்பட்டது. இந்த நிலையில் ரசிகர் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில் விஜயின் வாரிசு திரைப்பட ட்ரெய்லர் தோல்வியடைந்ததாக கூறப்பட்டுள்ளது. அதாவது அஜித்குமாரின் துணிவு பட டிரைலரை வெளியிட்டுள்ள ஜி ஸ்டூடியோஸ் 26 லட்சம் பின்தொடர்பாளர்களையே கொண்டுள்ளது. ஆனால் விஜயின் வாரிசு திரைப்படம் வெளியாகியுள்ள யூடியூப் பக்கத்தில் ரூ.2 கோடி பார்வையாளர்கள் இருக்கின்றனர். இதனால் குறைந்த பின்தொடர்பாளர்களை கொண்ட துணிவு, அதிக பார்வையாளர்களை பெற்று வெற்றிபெற்றதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.