தளபதி ரசிகர்களே தயாரா இருங்க.. இன்று மாலை 06:30-க்கு காத்திருக்கும் தரமான சம்பவம்..! உங்களுக்கான இதோ வாரிசு பட பாடல் அப்டேட்..!!varisu movie song update

 

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் திரைப்படம் வாரிசு. இப்படத்தை தில் ராஜு தயாரித்து வரும் நிலையில், படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. 

படத்தின் படபிடிப்புகள் ஒரு பக்கம் இருக்க, வியாபாரமும் சூடுபிடிக்க நடந்து வருவதாக கூறப்படும் நிலையில், இது குறித்த முழு விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், தற்போது விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தரும் வகையில் ஒரு தகவல் கிடைத்துள்ளது. 

Varisu movie

இன்று காலை 10:45 மணிக்கு படப்பாடல் அப்டேட் வருவதாக படக்குழு அறிவித்திருந்ததை தொடர்ந்து, இன்று மாலை 6:30 மணியளவில் பாடல் வெளியாக இருக்கிறது. இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.