வாரிசுடன் மோத ரெடியான துணிவு.! உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட சூப்பர் சர்ப்ரைஸ்.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

வாரிசுடன் மோத ரெடியான துணிவு.! உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட சூப்பர் சர்ப்ரைஸ்.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!


varisu-and-thunivu-release-in-pongal

வலிமை திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹெச்.வினோத் மற்றும் போனிகபூருடன் கூட்டணியில் இணைந்து உருவாக்கியுள்ள திரைப்படம் துணிவு. இந்தப் படத்தில் மஞ்சு வாரியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பஞ்சாபில் நடைபெற்ற வங்கி கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. துணிவு படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை உதயநிதியின் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் துணிவு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தளபதி விஜய் வம்சி இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. இந்தத் திரைப்படமும் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரே சமயத்தில் அஜித் மற்றும் விஜய்யின் திரைப்படங்கள் மோத உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பும், எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.