தனது தந்தையுடன், உலக அழகி ஐஸ்வர்யா ராயை சந்தித்த பிரபல தமிழ் நடிகை! தீயாய் பரவும் லேட்டஸ்ட் புகைப்படம்!varalaksmi-meet-aishwarya-raai-photo-viral

மோகன்லால் நடிப்பில் வெளிவந்த இருவர் என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யாராய். உலக அழகி பட்டம் வென்ற இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் அவர் தமிழ், இந்தி என பல மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

அதிலும் அவர் தமிழில் நடித்த ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அவர் தற்போது தமிழில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நடிகையாக இருக்கும் வரலட்சுமி நடிகை ஐஸ்வர்யா ராயை அவரது குடும்பத்தினருடன் சந்தித்துள்ளார். உடன் வரலட்சுமியின் தந்தையும், நடிகருமான சரத்குமாரும் உள்ளார். அப்பொழுது ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், சரத்குமார், வரலட்சுமி ஆகியோர் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வரலட்சுமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது.