தமிழ் திரையுலகை அசிங்கப்படுத்திய வரலட்சுமி சரத்குமார்... காரணம் தெரிந்து ஷாக்கான ரசிகர்கள்..!?varalakshmi-talking-about-tamil-cinema-industry

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பெயர் பெற்ற நடிகை வரலட்சுமி சரத்குமார். கோலிவுட் திரையுலகில் முதன் முதலில் சிம்பு நடித்த போடா போடி படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின் தாரை தப்பட்டை, மத கஜ ராஜா, சர்கார், இரவின் நிழல் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

வரலட்சுமி சரத்குமார்

முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்திருந்தாலும் இவரின் நடிப்பு மக்கள் மனதை கவரவில்லை. இதனால் தெலுங்கு சினிமாவின் பக்கம் தன் கவனத்தை திருப்பிய வரலட்சுமி, தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியான 'கிராக்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வெற்றி பெற்றுள்ளார்.

தற்போது இவர் நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் தான் 'கொன்றால் பாவம்'. கன்னடத்தில் வெளியான 'கரால ராத்திரி' படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டீசரை பிப்ரவரி 23ஆம் தேதி முண்ணனி நடிகையான சமந்தா வெளியிட போவதாக படக்குழு அறிவித்துள்ளது.

வரலட்சுமி சரத்குமார்

இதுபோன்ற நிலையில், வரலட்சுமி அளித்த பேட்டி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் அவர், தமிழ் சினிமாவில் திறமையை மதிப்பதில்லை. தெலுங்கு சினிமாவில் கிடைத்த வெற்றி தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும் எனக்கு கிடைக்கவில்லை. கதாநாயகிகளை அட்ஜஸ்மெண்ட்க்கு அழைப்பது அதிகமாக தமிழ் சினிமாவில் இருக்கிறது. 'கொன்றால் பாவம்' படத்திற்கு பிறகாவது என் திறமைக்கு தமிழ் சினிமாவில் மரியாதை கிடைக்கும் என்று கூறியது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.