சினிமா வீடியோ

ப்ளீஸ் இப்படியெல்லாம் போடாதீங்க.. பல பிரபலங்களுடன் இணைந்து நடிகை வரலட்சுமி வெளியிட்ட அருமையான குறும்படம்!!

Summary:

தமிழ் சினிமாவில் போடா போடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி ரசிகர்கள் ம

தமிழ் சினிமாவில் போடா போடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். அதனைத் தொடர்ந்து அவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் வில்லியாக களமிறங்கிய அவர் விஜய் நடிப்பில் வெளிவந்த சர்க்கார் மற்றும் விஷால் நடிப்பில் வெளிவந்த சண்டக்கோழி 2 திரைப்படத்தில் மிரட்டியிருப்பார்.

இவருக்கு தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது வரலட்சுமி கைவசம் காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ், யானை ஆகிய தமிழ் படங்களும், லாகம் என்ற கன்னட படமும் உள்ளது. 

 சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் நடிகை வரலட்சுமி அண்மையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் திரைப்பிரபலங்கள் சிலருடன் இணைந்து முகக்கவசம் எப்படியெல்லாம் அணியக்கூடாது என்பதை சித்தரித்து வீடியோ ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளார்.

கிருஷ்ணா, சதீஷ், யோகிபாபு, சந்தீப் கிஷன், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா, வித்யூலேகா, வரலட்சுமி  ஆகியோர் நடித்துள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 


Advertisement