அடேங்கப்பா..என்னா போஸ்! பவர் ஸ்டாருடன் வேற லெவலில் வனிதா நடத்திய போட்டோஷூட்! வாயடைத்துப் போன ரசிகர்கள்!

அடேங்கப்பா..என்னா போஸ்! பவர் ஸ்டாருடன் வேற லெவலில் வனிதா நடத்திய போட்டோஷூட்! வாயடைத்துப் போன ரசிகர்கள்!


vanitha-with-power-star-photoshoot-viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் வனிதா. இவர் பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களுடன் நடந்துகொண்ட விதம் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை உண்டாக்கி அவர் விமர்சனத்திற்கு ஆளானார்.

அதனைத் தொடர்ந்து வனிதா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நிகழ்ச்சியின் வெற்றியாளரானார். இந்நிலையில் அவர் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்துகொண்டு மூன்று மாதத்திலேயே விவாகரத்து பெற்று சமூக வலைத்தளங்களில் பேசுப்பொருளானார். பல சர்ச்சைகளை சந்தித்த அவர் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அடுத்தடுத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், படங்கள் என பிசியாக உள்ளார்.

இந்நிலையில் வனிதா பவர் ஸ்டாருடன் திருமணக்கோலத்தில், பைக்கில் செல்வது போன்று வித்தியாசமான போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதனை கண்ட ரசிகர்கள் வனிதாவிற்கு 4வது திருமணமா என கமெண்டு செய்தனர். ஆனால் அவை பிக்கப் ட்ராப் படத்திற்கான போட்டோ ஷூட் என தெரியவந்துள்ளது. மேலும் அவை படத்தின் புரமோஷனுக்காக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.