சினிமா

நீங்க ஒரு ஒயின் பாட்டில் மாதிரி! தளபதி விஜய்யை புகழ்ந்து தள்ளிய பிக்பாஸ் பிரபலம்! வைரலாகும் பதிவு!

Summary:

Vanitha vijaykumar tweet about thalapathi vijy

1995ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் சந்திரலேகா அடுத்து விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பிக் பாஸ் வனிதா விஜயகுமார். அது வனிதாவின் முதல் திரைப்படமாகும். அந்தப் படத்தை தொடர்ந்து அவர் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அப்படத்தில் மிகவும் ஹோம்லியான கதாபாத்திரத்தில் நடித்த அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் விஜய் ரசிகர் ஒருவர் சந்திரலேகா படம் பார்த்துக் கொண்டிருப்பதாக போஸ்டருடன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்நிலையில் அதனைக் கண்ட நடிகை வனிதா விஜயகுமார், எனது முதல் என்றென்றும் ஹீரோ. நான் உங்களது தீவிர ரசிகைகளுள்  ஒருவர். உங்களது ஒவ்வொரு படம் வெளியாகும் போதும், வருடங்கள் செல்லும் போதும் உங்கள் மீதான மதிப்பு மரியாதையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

நீங்கள் ஒரு ஒயின் பாட்டில் போல. உங்களுக்கு வயது ஏற ஏற உங்கள் மீதான அன்பும் அதிகரிக்கிறது. என்று தெரிவித்துள்ளார். இதனைக் கண்டு ரசிகர்கள் பலரும் வித்யாசமான காமெடிகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும் சிலர் விஜய் குறித்து சமீபகாலமாக தரக்குறைவாக பேசிவரும் மீரா மிதுனை கேள்வி கேட்டு விளாசுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்


Advertisement