கதறகதற, பெற்றமகனின் கழுத்தை நெரித்து கொடூர ஆட்டம் ஆடிய பிக்பாஸ் வனிதா!! வைரலாகும் பகீர் வீடியோ!!

கதறகதற, பெற்றமகனின் கழுத்தை நெரித்து கொடூர ஆட்டம் ஆடிய பிக்பாஸ் வனிதா!! வைரலாகும் பகீர் வீடியோ!!



vanitha-vijayakumar-fighting-at-chennai-airport-for-son

விஜய் டிவி ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சீசன் ஓன்று மற்றும் இரண்டு தொடர்ந்து சீசன் மூன்றையும் நடிகர் கமல் அவர்கள் தொகுத்து வழங்குகிறார். 

16 போட்டியாளர்களில் ஒருவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. இவர் பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்பே தனது  தந்தையுடன் சண்டைபோட்டு ரோட்டில் போராட்டமெல்லாம் நடத்தினார்.

vanitha

அதேபோல, பிக்பாஸ் வீட்டிற்குள்ளும் கத்திகொண்டே, சகப்போட்டியாளர்களுடன் சண்டைபோட்ட வண்ணம் உள்ளார். இவர் கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஸ்ரீ ஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும்  உள்ளனர்.பின்னர் இருவரும் கருது வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தனர்.

மேலும் வனிதாவின் மகனை ஆகாஷ் வளர்த்து வந்தார். பின்னர் சிறுவன் அவரது தாத்தாவான விஜயகுமாரிடம் வளர்ந்து வந்தார்.இந்த நிலையில் தனது மகனை தன்னுடன் அழைத்து செல்ல விஜயகுமாரிடம் வனிதா சண்டையிட்ட வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

vanitha

அதில் வனிதாவின் மகன் ஸ்ரீஹரி, நான் உன்னுடன் வர விரும்பவில்லை என்று கூறியும், அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை என்று கூறிவிட்டு வனிதா சிறுவனை இழுக்கின்றார்.சிறுவன் கதறி அழுதும் வனிதா அவனை விடவில்லை.

குழந்தையின் கழுத்தை நெருக்குகிறீர்களே என்று அருகிலிருந்தவர்கள் கூறியும் வனிதா அதனை பொருட்படுத்தாமல் மகனை இழுக்கின்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.