சினிமா பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியால் இந்த பிரபலம் மனம்நலசிகிச்சை பெற்று வருகிறாரா? வனிதாவின் டுவீட்டால் வெடித்த பூகம்பம்!!

Summary:

vanitha tweet about sanam shetty

பிக்பாஸ் சீசன் 3 கமல்ஹாசன் தொகுத்து வழங்க பிக்பாஸ் மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் 90 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.இந்நிலையில் நிகழ்ச்சியின் இறுதி நிலைக்கு இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கும் நிலையில் பிக்பாஸ் பட்டத்தை வெல்ல போவது யார் என அறிந்துகொள்ள பார்வையாளர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது அனைத்து பிரச்சினைகளிலும் தானாக முன்வந்து பெரும் சர்ச்சைகளை கிளப்பியவர் வனிதா. அவர் பிக்பாஸ் வீட்டில் எப்பொழுதே ஏதாவது ஓடி பெரிதாக்கி கொண்டே இருந்த நிலையில் பார்வையாளர்களால் பெரும் விமர்சனத்திற்கு ஆளானார்.

தொடர்புடைய படம்

முதலில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட அவர் மீண்டும் ரீஎன்ட்ரி மோளம் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து அனைவரையும் ஆட்டி வைத்தார். அதனை தொடர்ந்து எலிமினேட் செய்யப்பட்ட வனிதா சமீபத்தில் டுவிட்டர் பக்கத்தில், தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி பிக்பாஸ் நிகழ்ச்சியால் மனநல சிகிச்சை பெற்று வருகிறார் என்று கூறியதாக பெரும் சர்ச்சைகள் எழுந்தது.

இந்நிலையில் சனம் ஷெட்டி உங்களுக்கு பதிலளிக்கவே தான் புதிய டுவிட்டர் கணக்கு தொடங்கியுள்ளதாகவும், நான் மனநல சிகிச்சை பெறுகிறேன் என உங்களுக்கு யார் சொன்னது, அது உண்மை கிடையாது. உங்களிடம் சாக்ஷி இதுபோல் பொய்யான தகவலை கூறியிருந்தால் நான் அவரிடம் பேசுகிறேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் பிக்பாஸ் வீட்டிற்குள் பல்வேறு சிக்கல்களைப் பற்றி நீங்கள்  வெளிப்படையான பேச்சை நான் பலமுறை பாராட்டியுள்ளேன். ஆனால் இப்போது என் மன ஆரோக்கியம் குறித்த நீங்கள் வெளியிட்ட தவறான தகவலால் வருத்தப்படுகிறேன். இது என்னை மோசமான பாதிக்கிறது எனவும் கூறியுள்ளார் .
 


Advertisement