இதெல்லாம் தேவையில்லை.. மனமுடைந்து பிக்பாஸ் ஐஷு வெளியிட்ட கடிதம்.! வனிதா கூறியுள்ளதை பார்த்தீங்களா!!

இதெல்லாம் தேவையில்லை.. மனமுடைந்து பிக்பாஸ் ஐஷு வெளியிட்ட கடிதம்.! வனிதா கூறியுள்ளதை பார்த்தீங்களா!!


vanitha support to ayshu for asking sorry

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில்18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் ஐஷு. இவர் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடிய நிலையில் நிக்ஷனுடன் நெருங்கி பழகி ஆட்டத்தில் கவனம் செலுத்த தவறினார். மேலும் இதனால் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கவும் பட்டார். இந்த நிலையில் ஐஷூ குறைந்த வாக்குகளை பெற்று வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் நிகழ்ச்சியில் தான் விளையாடியதை கண்டும், சமூக வலைதளங்களில் மோசமான விமர்சனங்களை பார்த்து வருந்திய நிலையில் நீண்ட மன்னிப்பு கடிதம் ஒன்றை ஐஷூ வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், பிக்பாஸ் தனக்கு கிடைத்த முதல் பெரிய மேடை, அதனை நான் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. எனது குடும்பத்தினருக்கும், பெண்களுக்கும் அவமரியாதை ஏற்படுத்தி விட்டேன். இந்த நிகழ்ச்சியால் தான் உயிரை விட எண்ணியதாகவும், தனது பெற்றோர் தன் மீது கொண்ட நம்பிக்கையால் அவ்வாறு செய்யவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் பிரதீப் உள்ளிட்ட பலரிடமும் பிக்பாஸ் வீட்டில் தான் மோசமாக விளையாடியதற்காகவும், கெட்ட வார்த்தை பேசியதற்காகவும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக மனமுடைந்து தெரிவித்திருந்தார்.

vanitha

இந்நிலையில் நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான வனிதா விஜயகுமார், ஐஷூ உனக்காகவே நான் மீண்டும் எக்ஸ் தளத்திற்கு வந்து பதிவை போடுகிறேன். நீ யாரிடமும், ஏன் என்னிடமும் இந்த அளவிற்கு விளக்கம் அளித்து மன்னிப்பு கேட்க வேண்டியது தேவையில்லை. நீ உனது மனசாட்சிக்கு உண்மையாக இரு. இங்கு யாருமே சரியானவர்கள் கிடையாது. நாம் அனைவருமே ஏதேனும் தவறு செய்து கொண்டுதான் இருக்கிறோம். நீ தவறு செய்துவிட்டதாக கூறுவதை முதலில் நிறுத்து. மேலும் அவமானப்பட தேவையில்லை. உன்னை நினைத்து பெருமைபடு.

நீ வலிமையான பெண். எப்பொழுதுமே எனக்கு ஸ்பெஷல் தான். நீ திறமை வாய்ந்தவள். உனக்காக அருமையான எதிர்காலம் காத்திருக்கிறது. நீ உன்னை நம்பு, உடைந்து போகாதே என ஆதரவாக பதிவிட்டுள்ளார்.