நடிகை வனிதாவின் மகனை பார்த்தீர்களா.! சும்மா ஹீரோ மாதிரி இருக்காரே! அசத்தல் புகைப்படம்!!

நடிகை வனிதாவின் மகனை பார்த்தீர்களா.! சும்மா ஹீரோ மாதிரி இருக்காரே! அசத்தல் புகைப்படம்!!


Vanitha son latest photo viral

தமிழ் திரையுலகில் மிகப்பிரபல நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் வனிதா. இவர் விஜய்யுடன் இணைந்து சந்திரலேகா என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்த வனிதா திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் இருந்து விலகினார்.

பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெருமளவில் பிரபலமடைந்தார். தற்போது வனிதா பட சூட்டிங், பிசினஸ், யூடியூப் சேனல் என மிகவும் பிசியாக உள்ளார். நடிகை வனிதா மூன்று முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அவர் முதலாவதாக கடந்த 2000 ஆம் ஆண்டு நடிகர் ஆகாஷை திருமணம் செய்தார். அவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி, ஜோவிகா என இரு பிள்ளைகள் உள்ளனர்.

ஜோவிகா அம்மா வனிதாவுடனும், ஸ்ரீ ஹரி சில பல ஆண்டுகளாகவே அப்பா ஆகாஷ் மற்றும் தாத்தா விஜயகுமாருடன் வளர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் ஸ்ரீஹரி தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அது வைரலான நிலையில் வனிதாவின் மகன் ஹீரோ மாதிரி இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.