சினிமா

நடிகை வனிதாவா இது! புது ஸ்டைலில் ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டாரே! ஷாக் புகைப்படங்கள்!!

Summary:

நடிகை வனிதாவா இது! புது ஸ்டைலில் ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டாரே! ஷாக் புகைப்படங்கள்!!

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த சந்திரலேகா என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் வனிதா. இவர் முன்னணி நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகளாவார். அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களிலேயே நடித்த அவர் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர்.

இவர் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது செயலால் மோசமான விமர்சனத்திற்கு ஆளானார். பின்னர் பீட்டர் பாலுடன் மூன்றாவது திருமணம், மூன்று மாதத்திலேயே விவாகரத்து எனவும் இணையத்தில் பேச்சுப்பொருளானார். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர் அடுத்ததாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், படங்கள்,பிஸினஸ் என பிஸியாக இருந்து வருகிறார்.

மேலும் வனிதா சமூக வலைதளங்களிலும் செம ஆக்டிவாக இருந்து வருகிறார். யூடியூப் சேனல் தொடங்கி சமையல் வீடியோக்கள், அழகு குறிப்புகள் என பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். அதில் அவர் ஷார்ட்டாக ஹேர் கட் செய்து, கோட் அணிந்து கார்ப்பரேட் பெண்ணாக மாறியுள்ளார். அந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.


Advertisement