கோபத்தோடு கவினை அடிக்க சென்ற வனிதா.! இதுதான் காரணமா? வைரலாகும் ஷாக் வீடியோ!!



vanitha fight with kavin for fun task

பிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. 65 நாட்களை கடந்து பிக்பாஸ் சீசன் 3 இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கின்றது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் 8 பேர் மட்டுமே தற்போது பிக்பாஸ் போட்டியில் மீதம் உள்ளனர். கடந்த வாரம் நடிகை கஸ்த்தூரி வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் சீசன் மூன்று கமல்ஹாசன் தொகுத்து வழங்க மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மொத்தம் 16 பிரபலங்கள் போட்டியாளராக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன்,சாக்‌ஷி ஆகியோர் கடந்த நாட்களில் வெளியானர். அதனை தொடர்ந்து வைல்டுக்கு கார்டு எண்ட்ரியாக நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்கு வந்தார்.

bigboss

வீட்டிற்குள் வந்ததும் பல சர்ச்சைகள் கிளம்பும் என ரசிகர்கள் எதிர்பார்த்தநிலையில் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. பின்னர் விருந்தினராக மற்றொரு போட்டியாளராக வனிதா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அவர் வந்ததுமே  பல பிரச்சினைகள் வெடித்து வீடே இரண்டானது. பல சர்ச்சைகள் கிளம்பியது. இந்நிலையில் அபிராமி குறைந்த ஓட்டுக்களை பெற்று வெளியேறியநிலையில், தற்கொலை முயற்சி மேற்கொண்டதற்காக நடிகை மதுமிதா வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். 

வாரம் கஸ்தூரி குறைந்த வாக்குகளை பெற்று நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் கிராமத்து டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அப்பொழுது கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் மீண்டும் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டுள்ளனர். இதைக்கண்ட வனிதா கவினை அடிப்பது போல் எழுந்து சென்று இங்கிருந்து கிளம்புங்க என கூறுகிறார். இந்த பிரமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.