சினிமா

விமான பைலட்டை ரகசியமாக நான்காவது திருமணம் செய்து கொண்டாரா வனிதா! நடந்தது என்ன?உண்மையை உடைத்த பிரபலம்!!

Summary:

தமிழ் சினிமாவில் சந்திரலேகா என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஜயகுமாரின்

தமிழ் சினிமாவில் சந்திரலேகா என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. இப்படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்துள்ள வனிதா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ்  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.

வனிதா தொடர்ந்து ஏதாவது சர்ச்சையில் சிக்குபவர். அவர் கடந்த ஆண்டு பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்துகொண்டு, பின் ஒரு சில மாதங்களிலேயே விவாகரத்து பெற்றார். இது பேசும் பொருளானது. ஆனால் அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் வனிதா அடுத்தடுத்ததாக படங்கள், யூடியூப் சேனல் என பிஸியாக உள்ளார்.

இந்த நிலையில் தற்போது வனிதாவிற்கு வட இந்தியாவை சேர்ந்த பைலட் ஒருவருடன் கொல்கத்தாவில் உள்ள காளி கோவிலில் திருமணம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அவர் கருப்புநிற செயின் போன்று தனது கழுத்தில் அணிந்திருப்பது தாலி எனவும் கூறி வந்துள்ளனர்.

இந்நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில், நான் தற்போது சிங்கிளாகதான் இருக்கிறேன். அப்படியே தான் இருக்கிறேன். இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம். மேலும் அவற்றை யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.


Advertisement