கார் பிரேக் வயரை கட் செய்தது யார்! நீங்களா.. மரண பயத்தில் ரோகிணி..! சிறகடிக்க ஆசை புரோமோ.
இவரா? அதிரடியாக மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சர்ச்சை நடிகை!! வைரலாகும் ஷாக் வீடியோ!!

பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 3 50 நாட்கள் முடிவடைந்து மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன் என 6 போட்டியாளர்கள் கடந்த நாட்களில் வெளியேற்றப்பட்டனர்.
பிற போட்டியாளர்கள் குறைந்த ஓட்டுக்களை பெற்று வெளியேறினர். ஆனால் பிரபல நடிகர் சரவணன் ஒருசில காரணங்களுக்காக பிக்பாசால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இதற்கு பல்வேறு காரணங்கள் சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டாலும் உண்மையான காரணம் என்ன என்பது பிக்பாஸுக்கு மட்டுமே தெரியும்.
இந்நிலையில் 10 பேர் பிக்பாஸ் வீட்டில் விளையாடி வந்த நிலையில் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு பிரபல நடிகை கஸ்தூரி வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று லாஸ்லியா, அபிராமி, சாக்ஷி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்ட நிலையில் குறைவான ஓட்டுக்களை பெற்று சாக்ஷி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில்,தனது பேச்சாலும், நடத்தையால் பல சர்ச்சைகளை கிளப்பிய வனிதா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். மேலும் இவர் விருந்தினராக சென்றாரா அல்லது போட்டியாளராக சென்றாரா என்பது இன்று இரவு தெரியும். அதனால் ரசிகர்கள் பெரும் ஆர்வத்தில் உள்ளனர். இந்த பிரமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
வருக வருக என வரவேற்கிறோம்! 😊🙏#Day50 #Promo1 #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #BiggBossTamil #VijayTelevision pic.twitter.com/EqITUAwlYS
— Vijay Television (@vijaytelevision) August 12, 2019