மிஸ்டர் அண்ட் மிஸஸ்.. மீண்டும் ராபர்ட் மாஸ்டருடன் இணையும் வனிதா.! ஏன்?? வைரல் புகைப்படங்கள்!!vanitha-act-with-robert-master-in-mr-ans-mrs-movie

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த சந்திரலேகா என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் வனிதா. அதனைத் தொடர்ந்து சில படங்களிலேயே நடித்த அவர் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்தார். பின் அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தனது சமையல் திறமையால் அசத்தினார். தொடர்ந்து வனிதா சினிமா வாய்ப்புகள், பிசினஸ் மற்றும் யூடியூப் சேனல் என பிசியாக இருந்து வருகிறார்.

வனிதாவுடன் ராபர்ட் மாஸ்டர் 

நடிகை வனிதா சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். அவர் மூன்று முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இதற்கிடையே அவர் நடிகரும், நடன இயக்குனருமான ராபர்ட் மாஸ்டருடன் காதல் உறவில் இருந்ததாக தகவல்களும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகியிருந்தது. கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் என்ற படத்தை நடிகை வனிதா விஜயகுமார் தயாரிக்க, ராபர்ட் மாஸ்டர் இயக்கியிருந்தார். மேலும் இருவரும் இணைந்து அந்த படத்தில் நடித்தும் இருந்தனர்.

இதையும் படிங்க: அது தேவையே இல்லை... விமர்சனத்திற்குள்ளான நடிகை நிகிலா விமல் கருத்து.! என்னதான் கூறியுள்ளார்!!

vanitha

மிஸ்டர் & மிஸஸ் 

இந்த நிலையில் தற்போது அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் என்ற படத்தில் நடிக்கின்றனர். அவர்களுடன் ரவிகாந்த், ஷகிலா, பிரேம்ஜி, சுனில்  உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனராம். சில தினங்களுக்கு முன்பு பூஜை போட்டு படப்பிடிப்பு தொடங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

vanitha

இதையும் படிங்க: அஜித்திற்காக அவரது மனைவி ஷாலினி செய்த செயல்.! வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி.!?