பிரபல நடிகருக்கு மனைவியாகும் பிக்பாஸ் வனிதா! அவரே வெளியிட்ட ரகசியம்! ஷாக்கான ரசிகர்கள்!

பிரபல நடிகருக்கு மனைவியாகும் பிக்பாஸ் வனிதா! அவரே வெளியிட்ட ரகசியம்! ஷாக்கான ரசிகர்கள்!


Vanitha act as pair to samuthirakani in andagan movie

பாலிவுட்டில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி செம ஹிட்டான திரைப்படம் அந்தாதுன். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே, தபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். வசூல் சாதனை படைத்த இப்படம் 3 தேசிய விருதுகளையும் பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பெற பலரும் முயன்ற நிலையில், நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் அதனை வாங்கினார். தமிழில் அந்தகன் என்ற பெயரில் உருவாகும் இப்படத்தை ஜெ.ஜெ.பெட்ரிக் இயக்குகிறார். மேலும் இப்படத்தில்  ஹீரோவாக பிரபல நடிகர் பிரசாந்த் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். மேலும் அவர்களுடன் வனிதா, சமுத்திரக்கனி, மனோ பாலா, பிரியா ஆனந்த், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர்.

இதன் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது இந்நிலையில  நடிகை வனிதா அந்தகன் படத்தில் தான் நடிக்கும் கதாபாத்திரம் குறித்த தகவலை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் அந்தகன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சமுத்திரகனியின் மனைவி கதாபாத்திரத்தில் தான் நடிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.