காவாலா பாட்டு எல்லாம் ஓரம் போ!! வந்துட்டா மோனிகா.. வைரலாகும் லேட்டஸ்ட் பாடல்.
பிக்பாஸ் வனிதா குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து எடுத்த அதிரடி முடிவு! குவியும் வாழ்த்துகள்!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 கலந்து கொண்டு அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் வனிதா விஜயகுமார். அவர் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தது முதலே தனது செயல்களால் நிகழ்ச்சிக்கு பெரும் விறுவிறுப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மனதில் திரும்ப வந்தவர். இவர் முதலில் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் சில நாட்கள் கழித்து மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்து நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்கினார்.
அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். மேலும் இவர் அந்த நிகழ்ச்சியின் இறுதி வரை சென்று முதல் பரிசை தட்டிச் சென்றார். அந்த வெற்றியை தொடர்ந்து நடிகை வனிதா மகிழ்ச்சியான செய்தி ஒன்றை கூறியுள்ளார்.
அதாவது வனிதாவுக்கு சமையல் என்றாலும், சமைப்பது என்றாலும் மிகவும் பிடிக்கும் என்பதால் புதிதாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக கூறியுள்ளார். இதனை கேட்டதும் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.