வாணி போஜனை எதுக்குங்க இப்படி பண்ணீங்க...! ரசிகர்களின் கேள்விக்கு அதிரடியாக பதில் அளித்த இயக்குனர்...Vani bhojan not in mahaan movie

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சியான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி பிப்ரவரி 10 ம் தேதி  அமேசான் OTT தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் மகான். இத்திரைப்படம் ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இதில் சியான் விக்ரம் , துருவ் விக்ரம் , பாபி சிம்ஹா என அனைவரது நடிப்பும் சிறப்பாக இருந்தது.

இந்த படத்தில் கதாநாயகிகளாக சிம்ரன் மற்றும் வாணி போஜன் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்தது. ஆனால் படத்தில் வாணி போஜன் ஒரு காட்சியில் கூட  இடம் பெறவில்லை. மேலும் இதுகுறித்து அவரது ரசிகர்கள் கேள்வியெழுப்பி வந்தனர். 

இது குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஒரு பேட்டியில் குறிப்பிடுகையில், முதலில் சிம்ரனை பிரிந்து வந்த விக்ரம் வாணி போஜனுடன் சேர்ந்து வாழ்வது போல கதை எழுதி அதனை பாதி படமாக்கிவிட்டோம். ஆனால், கொரோனா கட்டுப்பாடுகள் ஷூட்டிங் இடைவெளி, என சில சூழ்நிலைகள் காரணமாக அவர்களது காட்சிகளை தொடர முடியவில்லை. அதனால் வாணி போஜன் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளையும் நீக்கிவிட்டு விக்ரம் கடைசி வரை தனியே வசிப்பது போல படமாக்கிவிட்டோம் என தெரிவித்துள்ளார்.